அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியான நான் தற்போது ஈரானை அழித்து வருகிறேன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான தனது இராணுவ வெற்றிகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச அரசியலில் அனலை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் இராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதாக அவர் இதில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“தோல்வியடைந்து வரும் நியூயார்க் டைம்ஸ்” இதழைப் படித்தால் அமெரிக்கா வெற்றி பெறவில்லை என மக்கள் தவறாக எண்ணக்கூடும் என்றும், ஆனால் கள நிலவரம் அதற்கு நேர்மாறானது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை தற்போது இல்லை என்றும்; அவர்களின் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் தலைவர்கள் பூமியின் முகத்திலிருந்தே துடைத்தெறியப்பட்டு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பலம்: அமெரிக்காவிடம் ஈடுஇணையற்ற துப்பாக்கிச் சூடு திறன் மற்றும் வரம்பற்ற வெடிமருந்துகள் இருப்பதாகவும், ஈரானியத் தலைவர்களை அவர் “மனநலம் பாதிக்கப்பட்ட அயோக்கியர்கள்” என்றும் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக உலகெங்கும் அப்பாவி மக்களைக் கொன்று வருவதாகவும், அமெரிக்காவின் 47ஆவது அதிபராகிய தான் தற்போது அவர்களை அழித்து வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
![]()