உலகம்

ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தின் மீது தாக்குதல்; 100 இற்கும் மேற்பட்டோர் பலி

ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தின் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் முன்னெடுத்துள்ள தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 112 பேர் உயிரிழந்துள்ளதாக அல்ஜெஸீரா தெரிவித்துள்ளது.

குர்திஸ்தான் மாகாண அவசரக்கால திணைக்களத்தின் தலைவரை மேற்கோள் காட்டி ‘தஸ்னிம்’ (Tasnim) செய்திச் சேவை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக அல்ஜெஸீரா தெரிவித்துள்ளது.

தாக்குதல்களில் 969 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 27 பேர் தற்போது பொது விடுதிகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் ஐவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தொடர் தாக்குதலினால் குர்திஸ்தான் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *