உலகம்

இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹர்முஸ் நீரிணை வழியாக ஈரான் அனுமதி?

இந்தியக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஹர்முஸ் நீரிணை ஊடாக பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்த வெளியிட்டுள்ளது.

இந்திய தகவல்களை மேற்கோள் காட்டி ரொயிட்டஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், வெளியே உள்ள ஈரானிய ஆதாரங்கள்அத்தகைய ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்று மறுத்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகமும், டில்லியில் உள்ள ஈரானிய தூதரகமும் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக பதிலளிக்கவில்லை.

மேலும், ஊடகங்களுடன் பேசுவதற்கு அங்கீகாரம் இல்லாததைக் காரணம் காட்டி, இந்திய வட்டாரம் பெயர் குறிப்பிட மறுத்துள்ளதாக ரொயிட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு இந்தியாவில் உள்ள காண்ட்லா துறைமுகத்திற்குச் சென்ற தாய்லாந்து கப்பல் நேற்று புதன்கிழமை ஹர்முஸ் நீரிணைப் பகுதியில் தாக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டம் தெரிவித்திருந்தது.

இந்த தாக்குதலை தொடர்ந்து வணிகக் கப்பல் போக்குவரத்து இராணுவத் தாக்குதல்களுக்கு இலக்காகக் கொள்ளப்படுவதை இந்தியா கண்டிக்கிறது” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

“மோதலின் ஆரம்ப கட்டத்தில் இதுபோன்ற பல தாக்குதல்களில் இந்திய குடிமக்கள் உட்பட விலைமதிப்பற்ற உயிர்கள் ஏற்கனவே இழக்கப்பட்டுள்ளன.

மேலும் தாக்குதல்களின் தீவிரமும் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாக” வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.

பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இஸ்ரேலும் அமெரிக்காவும் போரை தொடங்கியதிலிருந்து, ஈரான் ஹர்முஸ் நீரிணை வழியாக பயணித்த 16 கப்பல்களைத் தாக்கியுள்ளது.

ஹர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாலும், ஈரானின் தாக்குதல்கள் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு 200 டொலராக உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது தற்போதைய விலையை விட சுமார் இரு மடங்கு அதிகமாகும் என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *