அமெரிக்காவின் வானூர்தி தாங்கிப் போர்க்கப்பலில் தீ விபத்து; இரு கடற்படை வீரர்கள் காயம்

அமெரிக்காவின் வானூர்தி தாங்கி போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடற்படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஃபோர்ட் போர்க்கப்பலில் போர் நடவடிக்கைகளுடன் தொடர்பற்ற காரணத்தினால் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த இரண்டு அமெரிக்க கடற்படை வீரர்கள் தற்போது சீரான நிலையில் உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கப்பலின் பிரதான சலவை அறை பகுதியிலேயே இந்த தீ பரவத் தொடங்கியுள்ளது.
இந்தத் தீ விபத்தினால் கப்பலின் உந்துவிசை இயந்திரத் தொகுதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
தீ விபத்து ஏற்பட்ட போதிலும், இந்த பிரம்மாண்ட வானூர்தி தாங்கி போர்க்கப்பல் தொடர்ந்து முழுமையாகச் செயல்பட்டு வருவதாக இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை இந்த கப்பல், இரண்டு அணு உலைகள் மூலம் இயங்குகிறது.
இதனால் சுமார் 20 ஆண்டுகள் வரை எரிபொருள் நிரப்பாமல் தொடர்ந்து பயணிக்க முடியும்.
![]()