இலங்கை

தொடரான எரிபொருள் விநியோகம் இரு மாதங்களுக்கே உத்தரவாதம்;  எரிபொருள் நெருக்கடிக்கு டொலர் பிரச்சினை இல்லை.விநியோகப் பாதையே தடை என்கின்றார் ஜனாதிபதி

நாம் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் தொடர்பாக உத்தரவாதம் அளிக்க முடியும். ஆனால் நாம் அனைவரும்அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அதைக் கணிக்க முடியும். இந்த போர் இரண்டுமாதங்களுக்கு மேல் நீடித்தால், நமது கணிப்புகள் அர்த்தமற்றதாகிவிடும்.எரிபொருளை இறக்குமதி செய்ய எமக்கு டொலர் பிரச்சினை இல்லை. நம்மிடம் 7.2 பில்லியன் வெளிநாட்டு கையிருப்பு உள்ளது. எனவே இன்று ஒரு எரிபொருள் நெருக்கடிவந்தால், அது விநியோகப் பாதைகளில் ஏற்படும் தடைகளால் தான் ஏற்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர்கள் சபையின்(COYLE) 2026 வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் பேசுகையில்,

இப்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது. ஆனால் நமக்குத் தேவை அசைக்க முடியாத பொருளாதாரம். வெளிப்புற மற்றும் உள்நாட்டு அதிர்வுகளுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடியபொருளாதாரத்தை நாம் உருவாக்க வேண்டும்.ஆனால் தற்பொழுது எமக்கு வெளி அதிர்வுகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்குவலயத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தில்தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் சந்தைகளினால் பிணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறுபல்வேறு துறைகளினால் பிணைக்கப்பட்டுள்ள உலகில் ஏற்படுகின்ற எந்தவொரு அதிர்வும் எம்மில்தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய அதிர்வுகளை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்என்பதே முக்கியமான விடயம்.

பொதுவாக, மார்ச் மாத தொடக்கத்தில், ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை சுமார் 70 டொலராகஇருந்தது. இப்போது அது 100 டொலராக உயர்ந்துள்ளது. இது சுமார் 42% அதிகரிப்பு. மசகுஎண்ணெய் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக உள்ளது. எனவே, உலகில் உள்ள அனைவரும்இந்த நிச்சயமற்ற சூழ்நிலையில் பங்காளர்களாக மாறிவிட்டனர். மேலும் சமூக நடத்தை குறிப்பிட்டநெருக்கடி சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. நான் பொது மக்களை குறை சொல்லவில்லை.எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டின் விளைவுகளுக்கு நம் நாட்டு மக்கள் முகங்கொடுத்தனர்.தீயில் கருகிய ஒருவர் தீப்பொறியைக் கண்டாலும் பயப்படுவார் என்று ஒரு பழமொழி உண்டு.அதனால்தான் மக்கள் எரிபொருள் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் எரிபொருளை சேமித்துவைக்கத் தொடங்குகிறார்கள்.

மார்ச் முதலாம் திகதி எங்கள் டீசல் விற்பனை 4500 கிலோலீட்டராகஇருந்தது. மார்ச் 3 ஆம் திகதி எங்கள் டீசல் விற்பனை 10 500 கிலோலீட்டராக அதிகரித்தது.பெற்றோல் விற்பனை சுமார் 4000 கிலோலீட்டரிலிருந்து 9000 ஆக அதிகரித்துள்ளது. இப்போதுஅது மீண்டும் 6000 ஆகக் குறைந்துள்ளது. எனவே, இதிலிருந்து யாரும் தனியாக பாதுகாப்பாகஇருக்க முடியாது என்று நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் ஒவ்வொருவரும்இதற்காக ஏதாவது செய்து அதை எதிர்கொண்டால், நாம் அனைவரும் இதிலிருந்து மீண்டு வரலாம்.இந்த வெளிப்புற அழுத்தம் நம் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் நாம் எரிபொருள்விலையை அதிகரிக்க வேண்டியிருந்தது. நமது எரிபொருள் சந்தையில் 47% வெளிப்புறநிறுவனங்களின் கைகளில் உள்ளது. எனவே, நாம் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும்.மேலும் எரிபொருளை சாதாரண நுகர்வு நிலைக்கு கொண்டு வர வேண்டும். நாம் அனைவரும்ஒன்றிணைந்து அதை இன்னும் கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

2022 நெருக்கடிக்கு என்ன காரணம்? உலகின் விநியோகப் பாதைகள் தடைப்பட்டதால் அல்ல,எரிபொருள் கையிருப்புக்கள் தாக்கப்பட்டதால் அல்ல. எரிபொருளை இறக்குமதி செய்ய நம்மிடம்டொலர்கள் இல்லாமை தான் அதற்குக் காரணம். ஆனால் இப்போது நமக்கு அந்தப் பிரச்சினைஇல்லை. நம்மிடம் 7.2 பில்லியன் வெளிநாட்டு கையிருப்பு உள்ளது. எனவே இன்று ஒரு நெருக்கடிவந்தால், அது விநியோகப் பாதைகளில் ஏற்படும் தடைகளால் தான் ஏற்படும்.

எனவே, அதற்குத் தேவையான அனைத்து மாற்று வழிகள் குறித்தும் நட்பு நாடுகளுடன் நாங்கள்கலந்துரையாடி வருகிறோம். தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்தை வழங்குவதே எமதுபொறுப்பு. அதன் சீர்குலைவு இந்தப் பொருளாதாரத்தில் நாம் செய்த குறிப்பிடத்தக்க சாதனைகள்பலவற்றை குறுகிய காலத்திற்கு நிறுத்திவிடும். எனவே, ஒரு அரசாங்கமாக எங்கள் ஒட்டுமொத்தத்திட்டம் தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்தை உறுதி செய்வதாகும். நாம் தொடர்ச்சியானவலுசக்தி விநியோகம் தொடர்பாக உத்தரவாதம் அளிக்க முடியும். ஆனால் நாம் அனைவரும்அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அதை கணிக்க முடியும். இந்த போர் இரண்டுமாதங்களுக்கு மேல் நீடித்தால், நமது கணிப்புகள் அர்த்தமற்றதாகிவிடும்.

தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் போருக்கு பாரிய சக்தியை உருவாக்கியிருக்கும் ஒரு சகாப்தம் இது.எனவே, இந்த சக்திவாய்ந்த ஆயுதங்கள் என்ன சூழ்நிலையை உருவாக்கும் என்பதை நாம் கணிக்கமுடியாது. குறுகிய காலத்தை நாம் கணிக்க முடியும். ஆனால் அந்த காலத்திற்கு அப்பாலும் போர்தொடர்ந்தால், உலகில் யாராலும் அதை கணிக்க முடியாது.எனவே, இந்த இரண்டு மாதங்களுக்கு வலுசக்தி விநியோகத்தை நாங்கள் வழங்குவோம் என்றுநாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இருப்பினும், விலைகள் ஏற்ற இறக்கமாக இருக்கலாம்.நான் எண்ணெய் கிணற்றின் உரிமையாளர் அல்லது எரிபொருள் நிறுவனத்தின் பிரதிநிதி என்றுஇலாபம் ஈட்டுவதற்காக இதைச் செய்யவில்லை. இருப்பினும், ஒரு அரசாங்கமாக, தொடர்ச்சியானவலுசக்தி விநியோகத்தை வழங்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.

அதற்குத் தேவையான அனைத்து மூலோபாயங்களையும் நாங்கள் தயார் செய்து வருகிறோம்.உள்ளக அலுத்தத்தை எதிர்கொள்ள முடிந்தது. ஆனால் வெளிப்புற அலுத்தத்தை எதிர்கொள்ளஎங்களுக்கு சிறிது காலம் ஆகும். நாங்கள் வெற்றிகரமான பாதையில் இருந்தோம். எனவே, நாங்கள்அதிர்ச்சியடைந்துள்ளோம். ஆனால் அந்த அதிர்ச்சியை நாங்கள் மிகச் சிறப்பாக சமாளித்து அதைஅமைதிப்படுத்த முயற்சிக்கிறோம்.எனவே நாம் அனைவரும் இந்த அதிர்ச்சியை ஒன்றாக எதிர்கொள்வோம். நாம் அனைவரும் நம்மைப்பற்றியும் பொதுவாக அனைவரையும் பற்றியும் சிந்தித்து முடிவுகளை எடுக்கவும் நடைமுறைகளைமேற்கொள்ளவும் இதுதான் நேரம் என்று நான் நம்புகிறேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *