உலகம்

ஈரானில் 10,000 சிவிலியன் இலக்குகள் மீது தாக்குதல்கள்; ஐ.நா. மீது கடும் விசனம்

அமெரிக்க – இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை மௌனம் காப்பதாக, ஐக்கிய நாடுகளுக்கான ஈரானிய தூதர் அமீர்-சயீத் இரவானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேண வேண்டிய பொறுப்புள்ள பாதுகாப்பு சபை, இந்த விவகாரத்தில் “கண்மூடித் தனமாக” இருப்பது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில் இதுவரை சுமார் 10,000 சிவிலியன் இலக்குகள் தாக்கப்பட்டிருப்பதாகவும், இதில் ஏறத்தாழ 8,000 குடியிருப்புகள் அடங்கும் என்றும் இந்தத் தாக்குதல்களில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று ஈரானுக்கு நேர்ந்தது, நாளை வேறு எந்தவொரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கும் நிகழலாம்” என்று எச்சரித்த அவர், இந்தப் போரை நிறுத்த சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்

சர்வதேச சட்டங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அமெரிக்க – இஸ்ரேலிய “ஆக்கிரமிப்பு” நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *