உலகம்

எரிசக்தி நெருக்கடி – 30 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோலுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்த தென் கொரியா

ஆசியாவில் எரிசக்தி விலைகள் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், சுமார் 30 ஆண்டுகளில் முதன் முறையாக உள்நாட்டு எரிபொருள் விலைகளை அதிகாரிகள் கட்டுப்படுத்த உள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது.

அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி லீ ஜே மியுங், பெட்ரோலியப் பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயிக்கும் முறையை அரசாங்கம் விரைவாகவும் தீர்மானமாகவும் செயல்படுத்தும் என கூறினார்.

மேலும், தென் கொரியா தனது எரிசக்தி, மூலப்பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளின் பெரும்பகுதியை இறக்குமதி சார்ந்து இருப்பதால், உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடியாக தாக்கம் செலுத்துகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால்,
கச்சா எண்ணெய் விலை பீப்பாயொன்றுக்கு 110 அமெரிக்க டொலரைக் கடந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *