பலதும் பத்தும்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்; உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்

ஈரான் தரப்பிலிருந்து ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் குரூஸ் ஏவுகணைகள் (Cruise Missiles) என்பன தமது நிலப்பரப்பை இலக்கு வைத்ததாக கட்டார் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், ஈரானிலிருந்து மொத்தம் 10 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும், 2 குரூஸ் ஏவுகணைகளும் கட்டாரை நோக்கி ஏவப்பட்டுள்ளபோதும் கட்டார் ஆயுதப் படைகள் 6 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், 2 குரூஸ் ஏவுகணைகளையும் நடுவானிலேயே இடைமறித்து அழித்துள்ளன.

ஏனைய ஏவுகணைகளில் இரண்டு கட்டாரின் கடல் எல்லைக்குள்ளும், மற்றுமொரு இரண்டு ஏவுகணைகள் மக்கள் வசிக்காத பகுதிகளிலும் வீழ்ந்துள்ளன.

இதேவேளை சவூதி அரேபியாவை நோக்கியும் ஈரான் எட்டு ஆளில்லா வானூர்திகளை ஏவியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் அவற்றை தாம் சுட்டு வீழ்த்தியதாக சவூதி அரச படைகள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *