இலங்கை

ரணிலைக் கைது செய்த அநுரவுக்கு ஆபத்து? – உதய கம்மன்பில பகிரங்க எச்சரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்த ஜனாதிபதி அநுர எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் .

தனது உத்தியோக பூர்வ எக்ஸ் தனத்திலேயே இதனை பதிவிட்டுள்ளார் .

அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது ,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட காரணமாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையில் ஒரு குற்றமென்றால், இலங்கையில் இருந்த ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிகளும் கைது செய்யப்பட வேண்டும் என்பதே யதார்த்தமாகும்.

தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி ஓஷல ஹேரத் என்பவரால் வுல்வர்ஹாம்டன் (Wolverhampton) பல்கலைக்கழகத்திடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 இல் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தது ஒரு உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நாளிலிருந்தே நான் கூறி வருவது இது ஒரு பயனற்ற விவாதம் என்பதாகும்.

ஒரு ஜனாதிபதியின் பயணங்கள் உத்தியோகபூர்வமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாதுகாப்பு மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் வழங்க வேண்டும்.

அது உலக நியதியாகும் .இல்லையெனில், நாட்டுத் தலைவர்கள் பாதுகாவலர்கள் இல்லாமலும், பாதுகாப்பு வாகனங்கள் இல்லாமலும் தனிப்பட்ட பயணங்களில் செல்லும் போது எதிரிகளால் இலக்கு வைக்கப்படுவார்கள்.

இந்தக் கைது நடவடிக்கையின் பின்னணியில் உள்ள ஜனாதிபதி அநுரவுக்கும், எதிர்காலத்தில் இந்தக் கைது நடவடிக்கை தன்னைத்தானே தாக்கும் செயலாக அமைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *