இலங்கை

ஈரானியக் கப்பல் விவகாரம்; இலங்கையின் இறைமைக்கு அமெரிக்கா அங்கீகாரம்

ஈரானியக் கப்பல்கள் மற்றும் அதன் மாலுமிகள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை (Sovereignty) முழுமையாக மதிப்பதாகவும், அதனை அங்கீகரிப்பதாகவும் அமெரிக்கா அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

கடல்சார் விவகாரங்களில் இலங்கை எடுக்கும் தன்னாதிக்க முடிவுகளுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் எல்லைக்குள் இருக்கும் ஈரானிய மாலுமிகள் தொடர்பான விடயங்களை இலங்கை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே கையாள முடியும் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம் நிலவும் சூழலில், இலங்கையின் நிலைப்பாட்டை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளமை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *