பலதும் பத்தும்

மீண்டும் காங்கேசன்துறை -நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை

பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவையானது இன்று மீண்டும் ஆரம்பமானது.

தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து காலை 9.30 மணிக்கு 77 பயணிகளுடன் சிவகங்கை பயணிகள் படகானது காங்கேசன்துறை நோக்கிப் புறப்பட்டது. அது மதியம் 2.00 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து 92 பயணிகளுடன் மாலை 3.00 மணிக்கு நாகப்பட்டினம் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது.

கடந்த ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த சிவகங்கை பயணிகள் படகானது சுமார் நான்கு மாதங்களின் பின்னர் சேவையை இன்று ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *