இலங்கை

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கிய அமெரிக்கா! மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு சிக்கல்

இலங்கை அரசாங்கத்திற்கு தங்கள் காவலில் உள்ள ஈரானிய கடற்படை வீரர்களை ஈரானுக்கு மீண்டும் அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த புதன்கிழமை இந்தியப் பெருங்கடலில், IRIS Dena என்ற ஈரானிய போர் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது.

இந்த தாக்குதல் காலி நகரத்திலிருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் நடைபெற்றதுடன் சம்பவத்தில் பல டஜன் ஈரானிய கடற்படை வீரர்கள் உயிரிழந்ததனர்.

இந்த தாக்குதலுக்கு பின்னர், IRIS Booshehr என்ற மற்றொரு ஈரானிய கடற்படை உதவி கப்பல் இலங்கையின் பிரத்யேக பொருளாதார கடல் எல்லைக்குள் சிக்கியிருந்தது.

அதிலிருந்த 208 பணியாளர்கள் இலங்கையில் இறக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுக்கு வந்துள்ள இந்தக் கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக தங்க வைப்பது மனிதாபிமான பொறுப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாய்க்க தெரிவித்துள்ளார்.

ஆனால், அமெரிக்க வெளிவிவகாரத் துறையின் தொழில் உறுப்பினரும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைவருமான ஜெய்ன் ஹோவெல், ஈரானிய கப்பல் பணியாளர்களை உடனடியாக ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதன்படி, IRIS Dena கப்பலில் இருந்து உயிர் தப்பிய 32 பேரும், IRIS Booshehr கப்பலின் பணியாளர்களும் ஈரானுக்கு மீண்டும் அனுப்பப்படாமல் இருக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவர்களை ஈரான் பிரசார நோக்கங்களுக்காக பயன்படுத்த முயற்சிக்காத வகையில் இலங்கை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *