உலகம்

ஈரானை கடுமையாக எச்சரிக்கும் ஐரோப்பிய வல்லரசுகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அண்டை நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்துள்ள ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் ஜேர்மனிய தலைவர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த கண்டனத்தை பதிவுசெய்துள்ளனர்.

குறித்த அறிக்கையில் ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

ஈரான் மீதான இன்றைய தாக்குதல்களில் தாம் பங்கெடுக்கவில்லை என்பதை குறித்த மூன்று நாடுகளினதும் தலைவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இருப்பினும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட சர்வதேச பங்காளிகளுடன் தாம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அண்டை நாடுகள் மீதான ஈரானின் கண்மூடித்தனமான தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள அவர்கள், இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வருமாறும், ஈரான் மக்கள் தங்களது எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *