உலகம்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்; திருப்பி அடிக்கும் ஈரான்; நாடு முழுவதும் அபாய எச்சரிக்கை சைரன்கள்

ஈரான் மீதான இஸ்ரே – அமெரிக்கா கூட்டு தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படை சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானியப் பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைகளை இலக்கு வைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேலிய ராணுவம் கண்டறிந்துள்ளது.

இந்தநிலையில், இஸ்ரேல் முழுவதும் அபாய எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கவிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேசமயம் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேலிய வான் பாதுகாப்புத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *