இலங்கை

சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே தமிழ்ச் செல்வன் இலக்கு வைத்து கொல்லப்பட்டார்

“சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த தமிழ்ச் செல்வன் இலக்கு வைக்கப்பட்டு, வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.” என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே விமல் வீரவன்ச இந்த தகவலை வெளியிட்டார்.

புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த சுரேஷ் சலே ஒருநாள் பாதுகாப்பு சபைக் கூட்டத்தின்போது முக்கிய தகவலொன்றை வெளியிட்டிருந்தார்.

அதாவது, அடுத்த வாரம் விசேட இலக்கு இருப்பதாகவும், விமானப்படையின் தாக்குதல் விமானமொன்றை 24 மணிநேரமும் தயார் நிலையில் வைக்குமாறும்“ அவர் கூறி இருந்தார்.

இதற்கமையவே தமிழ்ச்செல்வன் இருந்த இடம்மீது துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ச் செல்வனுடன் இருக்கும் நபர் ஒருவர் ஊடாகவே அந்த உளவு தகவல் பெறப்பட்டிருந்தது.

எனவே, தமிழ்ச் செல்வனுடன் இருந்தவருடன் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருந்தது என்பதற்காக அவரை புலியென கூற முடியுமா? என விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.

புலனாய்வு பிரிவு என்றால் அனைத்து தரப்புடனும் தொடர்பு இருக்கும்.” எனவும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *