உலகம்

பிரதமர் மார்க் கார்னி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

க​னடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்​கள் அரசு முறை பயண​மாக  இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். மும்​பை​யில் தரை​யிறங்​கும் அவர் இன்​றும் நாளை​யும் பல்​வேறு நிறு​வனங்​களின் சிஇஓக்​கள், தொழில்​துறை நிபுணர்​களை சந்​தித்​துப் பேசுகிறார்.

இதைத் தொடர்ந்து மார்ச் 1-ம் தேதி அவர் டெல்லி செல்கிறார். மார்ச் 2-ம் தேதி பிரதமர் மோடியை சந்​தித்து பேச உள்ளார்.

இந்த சந்திப்பின்போது வர்த்​தகம், முதலீடு, எரிசக்​தி, அரிய வகை கனிமங்​கள், விவ​சா​யம், கல்​வி, ஆராய்ச்சி, செயற்கை நுண்​ணறிவு உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் இருதரப்பு ஒத்​துழைப்பை அதி​கரிப்​பது குறித்து இதன்போது ஆலோசனை நடத்​தப்பட உள்​ளது.

பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​களும் கையெழுத்​தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அதேவேளை ஜஸ்டின் கனடா முன்​னாள் பிரதமர் ஜஸ்​டின் ட்ரூடோ ஆட்சிக்காலத்​தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி கனடாவை சேர்ந்த காலிஸ்​தான் தீவிர​வாதி ஹர்​தீப் சிங் நிஜ்ஜார் மர்​ம​மான முறை​யில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார்.

இந்த கொலை​யில் இந்​திய தூதரக அதி​காரி​களுக்கு தொடர்பு இருப்​ப​தாக அப்​போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் பகிரங்​க​மாக குற்​றம் சுமத்திய நிலையில் இரு நாடுகளுக்கும் இடைலான நட்பில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது க​னடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா செல்லும் நிலையில், இப்​போது இரு நாடு​களின் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர்கள் ஆக்​கப்​பூர்​வ​மான பேச்​சு​வார்த்தை நடத்தி வருகின்​றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *