இலங்கை

மாகாண சபைத் தேர்தலில் சஜித்-ரணில் அணி இணைந்து போட்டி

மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் நிச்சயமாக ஒன்றிணைந்து போட்டியிடும் என பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளுக்கும் இடையிலான இணைவு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் வரலாற்றில் இல்லாத வகையில் மிகப்பெரிய ஊழலாக நிலக்கரி ஊழல் நடந்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் இந்த ஊழலை மறைக்க முயற்சிப்பதாகவும், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 7,672 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இறக்குமதி செய்யப்பட்ட 9 நிலக்கரி கப்பல்களிலும் தரமற்ற நிலக்கரியே காணப்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தரமான நிலக்கரியில் இருக்க வேண்டிய கலோரி அளவு (5900 – 6150 kcal) இந்தக் கையிருப்புகளில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளின் அடிப்படையிலேயே இந்த ஊழல் அம்பலமாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த கால அரசியல்வாதிகளை “திருடர்கள்” என முத்திரை குத்திய ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மீதே இப்போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக அவர் விமர்சித்தார்.இந்த நிலக்கரி ஊழல் குறித்து அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *