இலங்கை

10 வது வருடத்தை எட்டிய தாய்மாரின் தேடல்; வவுனியாவில் உறவுகள் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமானது பத்தாவது வருடத்தை எட்டியதை முன்னிறுத்தி இவ் போராட்டம் இடம்பெற்றிருந்தது.

வவுனியா தாய்பால் திணைக்களத்திற்கு முன்பாக 3291 நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் பந்தல் அமைத்து போராட்டம் நடாத்தி வரும் பந்தலிற்கு முன்பாகவே குறித்த போராட்டமானது இடம்பெற்றது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button