இலங்கை
அருங்காட்சியகமாக மாறும் விடுதலை புலிகளின் தலைவர் வீடு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வீடு என்று சொல்லப்படும் அவரது சகோதரியின் காணியில் கட்டப்படவுள்ள பிரமாண்டமான கட்டிடம் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் பின்வரும் விடயங்கள் பற்றி வல்வெட்டித்துறையின் முன்னாள் தவிசாளர்களான நடராஜா அனந்தராஜ் இந்த விடயங்கள் தொடர்பாக தாயகம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தெளிவூட்டல் ஒன்றை வழங்கி உள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர், 13 வயது வரை வாழ்ந்த வீடு, இராணுவத்தினரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு, அத்திவாரத்துடன் சேர்த்து அதன் இடிபாடுகளும் அங்கிருந்து அகற்றப்பட்டன.
![]()