உலகம்
பெரு இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்தில் 15 பேர் பலி

பெரு இராணுவ ஹெலிக்கொப்டர் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான பெருவின் இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று நேற்று அரேகுய்பா பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த ஹெலிக்கொப்டர், லிமாவில் தரையில் விழுந்து நொறுங்கியது தெரிய வந்தது. இந்த விபத்தில், ஹெலிக்கொப்டரில் பயணித்த, 15 பேரும் உயிரிழந்ததாக, பெரு இராணுவம் தெரிவித்துள்ளது.
![]()