உலகம்

புடின் தனது போர் இலக்குகளை அடையத் தவறிவிட்டார் – செலென்ஸ்கி கருத்து

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது “போர் இலக்குகளை” அடையத் தவறிவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா உள்ளிட்ட பல ஐரோப்பிய தலைவர்கள் கியேவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகக் கொடிய மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக,
இந்த மாத தொடக்கத்தில் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இதனிடையே, சபோரிஜியாவில் ஒரே இரவில் நடந்த ரஷ்ய தாக்குதல்களில் முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உலக வங்கி உக்ரைனின் மீள்கட்டமைப்பு செலவுக் கணிப்பை புதுப்பித்து, கடந்த ஆண்டின் $524 பில்லியனிலிருந்து $588 பில்லியனாக உயர்த்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *