இலங்கை

எரிவாயு தட்டுப்பாடு ‘அடுப்புக்கு விறகு’; சேகரித்து விநியோகிக்க தேசிய இயக்கம் ஆரம்பம் 

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் நிலையில் கொழும்பு உள்ளிட்ட நகர்புறங்களுக்கு கிராமிய பிரதேசங்களில் இருந்து விறகுகளை சேகரித்து விநியோகிப்பதற்காக ‘அடுப்புக்கு விறகு’ தேசிய இயக்கத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய பாவனையாளர் முன்னணியின் ஏற்பாட்டாளரான அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பானது செங்கற்களை பயன்படுத்தி அமைக்கப்பட்ட விறகு அடுப்பில் பாத்திரமொன்றை வைத்து அடுப்பை பற்ற வைத்தே ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது அசேல சம்பத் கூறுகையில்,

நகர்புறங்களில் தற்போது இருக்கும் உண்மை நிலைமை இதுதான். எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் விறகு அடுப்பு முறைக்கு மக்கள் மாறி வருகின்றனர். சந்தையில் எரிவாயு இருப்பதாக அமைச்சர் கூறினாலும் எரிவாயு சிலிண்டர்களை சந்தையில் பெற்றுக்கொள்ள முடியவில்லை. மார்ச் 12ஆம் திகதியே எரிபொருளை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளனர். இதனால் அதுவரை ‘அடுப்புக்கு விறகு’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து கிராமிய பிரதேசங்களில் உள்ள மரங்களின் விறகுகளை சேகரித்து அவற்றை கொழும்பு உள்ளிட்ட நகர் பிரதேசங்களில் உள்ள குடியிருப்பு தொகுகளில் விநியோகிக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

மார்ச் 12ஆம் திகதியே எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விடப்படும். அதுவரையில் மூன்று செங்கற்களை கொண்டு அடுப்பை அமைத்து விறகில் எரித்து பழைய முறைக்கு செல்லுமாறு மக்களை கேட்கின்றேன். இதுதான் மாற்றம் என்பது. ஒரே பிடியில் போனவர்கள் இப்போது விறகு அடுப்புக்கு போக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *