இந்தியா

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! – முழு விவரம்

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது.

அக்குழுவில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, கே.என். நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இடம்பெற்றுள்ளனர்.

இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

நாளை(பிப் 23) மனிதநேய மக்கள் கட்சியுடனும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்துடனும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

பிப். 26 ஆம் தேதி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (சிபிஎம்) திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது.

பிப். 27ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (சிபிஐ) பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

இத்தேர்தலில் தேமுதிக இணைந்திருப்பதால் பேச்சுவார்த்தையில் திமுக கறார் காட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *