உலகம்

200% வரி அச்சுறுத்தல் இந்தியா, பாகிஸ்தான் மோதலை நிறுத்தியது – ட்ரம்ப் தெரிவிப்பு!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2025 ஆம் ஆண்டு இராணுவ மோதலை நிறுத்துவதற்கான தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை நடைபெற்ற அமைதி வாரியக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி, தனது வரி அச்சுறுத்தல்தான் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் அதிகரிப்பதைத் தடுத்தது என்று மீண்டும் ஒருமுறை கூறினார்.

மேலும், அணு ஆயுதம் ஏந்திய இரண்டு அண்டை நாடுகளும் மேதலை நிறுத்தாவிட்டால் 200 சதவீத வரிகளை விதிக்கப் போவதாக இதன்போது தான் அச்சுறுத்தியதாகவும் ட்ரம்ப் கூறினார்.

அத்துடன், இந்த மோதலின் போது, மிகவும் விலையுயர்ந்த 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தணிப்பதில் தான் செல்வாக்கு செலுத்தியதாக ட்ரம்ப் கடந்த காலங்களில் இதேபோன்ற கூற்றுக்களை தொடர்ந்தும் முன்வைத்துள்ளார்.

எனினும், கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இராணுவ மோதலின் போது மூன்றாம் தரப்பு தலையீடு அல்லது விமானங்கள் இழப்பு குறித்த அனைத்து கூற்றுகளையும் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *