மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அடுத்த பாராளுமன்ற அமர்வில் கட்டாயம் முதலாவது கூட்டத்தை நடத்த வேண்டும்

மாகாண சபைகளுக்கான தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அது தொடர்பான பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நியமிக்கப்படுள்ள விசேட செயற்குழு 3 மாத காலத்துக்குள் செயற்குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அடுத்த பாராளுமன்ற அமர்வில் முதலாவது கூட்டத்தை நடத்த வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும் எம்.பி.யுமான இரா.சாணக்கியன் வலியுறுத்தினார்
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது விசேட கூற்றை முன்வைத்தே இதனை வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,
மாகாணசபை தேர்தல் குறித்து ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்கு விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை கடந்த மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு பின்னர் இந்த செயற்குழுவுக்கு அரசாங்கம் தமது பிரதிநிதிகளை முன்மொழிந்து அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் செயற்குழுவை நியமித்துள்ளது. இதற்கு அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
இந்த செயற்குழு 3 மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் செயற்குழுவின் முதலாவது கூட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் முன்னாள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சரும் தற்போதையாய் எம்.பி.யுமான பைஸர் முஸ்தபாவையும் இந்தக் குழுவின் உறுப்பினராக நியமிக்குமாறும் வலியுறுத்துகிறேன் என்றார்.
![]()