இலங்கை

“அநுர மீற்றர்” எங்கே வாக்குறுதிகளை கூகிளில் தேடிப்பாருங்கள்; அரசை விமர்சித்த ஹர்சன ராஜகருணா

அநுர மீற்றர் என்று சொன்ன வாக்குறுதிகள் எங்கே. அவற்றை கூகிளில் தேடிப்பாருங்கள்..

மக்கள் வரம் வழங்கப்பட்டுள்ளதாக சொன்னீர்கள். அவ்வாறாயின் அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எங்கே என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா விமர்சித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு அரசாங்கத்தை விமர்சித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

மின்கட்டணத்தை இரண்டாவது தடவையாக நூற்றுக்கு 13, 14 என்று அதிகரிக்க போகிறீர்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு வரியை நீக்க வேண்டும் என சொன்னீர்கள். புதிய யாப்பை கொண்டு வருவதாக சொன்னீர்கள். யாப்பு மாற்றம் எஙகே அவற்றையும் முன்வையுங்கள்

அநுர மீற்றர் என்று சொன்ன வாக்குறுதிகள் எங்கே. அவற்றை கூகிளில் தேடிப்பாருங்கள்

மின்சாரம் குறைப்பதாக சொல்லி விட்டு இன்று கட்டணத்தை அதிகரிக்க கோருகிறீர்கள்.

செயலாளரை விரட்டுவதற்கு சதி நடந்துகொண்டிருக்கின்றது. நாட்டின் ஜனநாயகத்தில் கைவைக்க முயற்சிக்கின்றீர்கள். ஒருபக்கத்தில் ஒருவர் சொல்கின்றார் மக்கள் வரம் என்ன என்று நீதிமன்றத்தில் கேளுங்கள் என்று.

மறுபக்கம் நீதிமன்றத்தில் கைவைக்கின்றீர்கள். கணக்காய்வாளர் நாயகத்தில் கைவைக்கின்றீர்கள். அதேபோன்று பாராளுமன்ற உயர் ஆசனத்தில் கைவைக்கின்றீர்கள்.

சாதாரண அரச பணியாளர்களை கள்வர் என்கிறீர்கள். உங்கள் வாசுதேவ நாணயக்கார கள்வரா? ஹேமகுமார நாணயக்கார கள்வரா?

பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் கள்வர்கள் இல்லை. 225 பேரும் கள்வர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். உங்களுடைய கட்சிக்கு நிதி கிடைக்கின்றது. அதன்மூலம் நீங்கள் பராமரித்துக்கொள்கின்றீர்கள்.

எல்லாக்கட்சிகளுக்கும் அந்த சந்தர்ப்பம் இல்லை. உங்களுடைய கட்சி செல்வந்தக்கட்சி. மற்றையகட்சிகள் அவ்வாறில்லை. உங்கள் இரட்டைத்தன்மை என்ன என்றவாறு தாறுமாறாக விமர்சித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *