உலகம்

ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்பு மீது உக்ரைன் தாக்குதல்

ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ரஷ்யாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள இல்ஸ்கி சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவின் சில பகுதிகளை உக்ரேனிய ட்ரோன்கள் குறிவைத்து தாக்கியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், ஒரே இரவில் 151 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *