இலங்கை

மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க அநுர இன்று இந்தியா பயணம்; பாகிஸ்தானுக்கு செல்வாரா?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ஏ ஐ 2026 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை மாலை இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார்.

செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.

ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும்,45ற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன், செயற்கைநுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்கால முன்னெடுப்புகள் மற்றும் உலகளாவியசவால்களை முறியடிக்க அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்குவிரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த இந்திய விஜயத்தின் போது, ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

பாகிஸ்தானுக்கு செல்வாரா அநுர?; அந் நாட்டு பிரதமர் அழைப்பு

பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷெபாஸ் ஷெரீப் விடுத்த அழைப்பினை ஏற்று, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை இவ்வருடத்திற்குள் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று திங்கள் காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இந்த அழைப்பினை விடுத்தார்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் வருகை மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் இலங்கை வருகை ஆகியன இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *