ஆளுநராகிறார் ஓ.பி.எஸ்?; புது வியூகம் வகுக்கிறது பா.ஜ.க.!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், O.
Panneerselvam (OPS) விரைவில் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல்
வெளியாகியுள்ளது.
பா.ஜ.க.வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று இந்த
செய்தியை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய
ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதில் பா.ஜ.க. BJP தீவிரம்
காட்டிவருகின்றது.
பல பகுதிகளில் வெற்றிநடை போட்டாலும் தமிழகத்தில் கால்
பதிப்பதென்பது பா.ஜ.கவுக்கு தொடர்ந்து எட்டாக் கனியாகவே
இருந்துவருகின்றது.
எனவே, அ.தி.மு.க. தலைவர்களை ஒன்றிணைத்தால் மட்டுமே தி.மு.கவை
வெல்ல முடியும் என பா.ஜ.க. கருதுகின்றது.
எனினும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைவதை கடுமையாக
எதிர்க்கிறார் இ.பி.எஸ். என்றழைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி.
புதிய கட்சி தொடங்கி தினகரன் வழியில் கூட்டணி சேரவும் ஓ.பி.எஸ்.
தயாராக இல்லை.
எனவே, இச்சூழலை சமாளிக்க, ஓபிஎஸ்-ஐ ஆளுநராக நியமிப்பது குறித்து
பாஜக பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
“ ஓபிஎஸ்-ஐ ஆளுநராக்க இபிஎஸ் தடையாக இருக்க மாட்டார். ஓபிஎஸ்-க்கு
இப்பதவி வழங்குவதால் அவரது சமூகத்தினரும் ஆதரவாளர்களும் மகிழ்ச்சி
அடைவார்கள். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி இறுதி முடிவு
எடுப்பார்” என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மணிப்பூர் ஆளுநராக இருந்த தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன்
2025 ஆகஸ்டில் மறைந்தது முதல் அப்பதவி வெற்றிநடமாக உள்ளது.
அதேபோல், மற்றொரு தமிழரும் பாஜக தலைவருமான சி.பி.ராதா கிருஷ்ணன்,
மகாராஷ்டிரா ஆளுநராக இருந்தார். இவர் குடியரசுத் துணைத்
தலைவரானார்.
இதனால் மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பு, கூடுதலாக குஜராத் ஆளுநர்
ஆச்சார்ய தேவரத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் ஓபிஎஸ் ஆளுநர் பதவியில்
அமர்த்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
![]()