உலகம்

ரஷ்யாவின் தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரேன்; மக்கள் அந்தரிப்பு

ரஷ்யா உக்ரேன் மீது ட்ரோன்கள் மற்றும் பொலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை மேற்கொண்டுள்ளமையினால் மின்சார கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரேனின் மொத்த மின் உற்பத்தித் திறனில் சுமார் 70 முதல் 80 சதவீதம் வரை தற்போது செயலிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

16 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு

உக்ரேனில் தற்போதைய வெப்பநிலை -15°C முதல் -20°C வரை குறைந்துள்ள நிலையில், மின்சாரம் இல்லாதது மக்களைப் பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

தலைநகர் கீவ் மற்றும் ஒடெசா போன்ற முக்கிய நகரங்களில் மக்கள் நாளொன்றுக்கு 03முதல் 04மணி நேரம் மட்டுமே மின்சாரத்தைப் பெறுவதோடு, பல இடங்களில் 16 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடிப்பதாவும் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் இந்த வியூகம் “குளிர்காலத்தை ஒரு ஆயுதமாக” பயன்படுத்துவதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. அதேவேளை மின்சாரம் இல்லாததால் வீடுகளை சூடாக்கும் வசதி குடிநீர் விநியோகம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை முடங்கியுள்ளன.

உக்ரேன் அரசாங்கம் ஆங்காங்கே “நெகிழ்ச்சி புள்ளிகள்” (Resilience Points) என்ற பெயரில் தற்காலிக முகாம்களை அமைத்துள்ளது.

அங்கு மக்கள் தங்கள் கைபேசிகளை சார்ஜ் செய்யவும், உணவைச் சூடாக்கவும், குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஏற்பட்டுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *