முச்சந்தி

வாழைச்சேனையில் பெரும் பதற்றம்; காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு; மூவர் காயம்!  

மட்டக்களப்பு, வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

அதிகாலை வேளையில் ஊருக்குள் நுழைந்த இந்த யானை, வீதிகளில் சென்றவர்கள் மீதும் குடியிருப்புகள் மீதும் திடீர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணின் சடலமும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நகரப் பகுதிக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த காட்டுயானைகளை காட்டிற்கு விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *