இலங்கை

அநுர, ரணில்,மைத்திரிக்கு நீதிமன்றால் அழைப்பாணை; உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன அகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நேற்று முன்தினம் புதன்கிழமை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சத்திர சிகிச்சை மூலம் தங்கள் பாலியல் அடையாளத்தை மாற்றிக்கொள்ள உதவும் முந்தைய மற்றும் தற்போதைய அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையின் பின்னர் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுவை விமானப்படையின் ஓய்வுபெற்ற ஊனமுற்ற போர் வீரரான சாந்த ஜெயதிலகவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் மூவர் அடங்கிய தீர்பாயத்தின் முன்பாக நேற்று முன்தினம் பரிசீலிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி மீண்டும் பரிசீலிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

எனினும் ஒரு வாரத்திற்குள் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *