முச்சந்தி

யாழில் பரவும் குற்றச்சாட்டு; மலக்கழிவால் நிறைந்த வாய்க்கால்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கழிவுகளை வெளியேற்றும் இயந்திரம் செயலிழந்துள்ளதாகவும், அதன் காரணமாக மருத்துவ கழிவுகள் அருகிலுள்ள வாய்க்கால்களுக்கு திறக்கப்பட்டதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.

வைத்தியசாலையில் தேங்கி நிற்கும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு இதுவரை எந்தச் சேவையும் முன்வரவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுச் சுகாதாரம் தொடர்பான கவலைகள் எழுந்துள்ளன.

இந்த விடயம் தொடர்பாக சுகாதார பரிசோதகரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட இடங்களின் புகைப்படங்களை எடுத்துவைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை வைத்தியசாலை நிர்வாகம் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் சில காலமாக மூடி மறைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *