முகத்தை பளபளக்க வைக்க தக்காளி போதும் – இப்படி போடுங்க

சருமம் வறண்டு இருந்தால் அதற்கு இயற்கை பொருட்கள் பயன்படுத்துவது நல்லது. சிலருக்கு வெளியெ செல்லுதல் வெயிலில் சுற்றும் காரணமாக முகம் வறண்டு, கைகள் மற்றும் கால்கள் வெண்மையாகி, உதடுகள் வெடிக்கத் தொடங்குகின்றன.
சிலர் இதை போக்க இரசாயன பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் அவை தற்காலிகமாகவே உங்களுக்கு கலனை தரும்.
தக்காளி ஃபேஸ் பேக் சருமத்தை பொலிவாக்கவும், கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் துளைகளைக் குறைக்கவும் உதவும் ஒரு சிறந்த இயற்கைப் பொருளாகும்.
இதற்கு வீட்டிலேயே சிறந்த வழி இருக்கிறது அது தான் தக்காளி இதை முறையாக மகத்திற்கு போட்டால் முகம் பளபளப்பாக இருக்கும். இதை பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன், சிறிது தயிர் ஆகியவற்றைக் கலந்து பேக் தயாரிக்கவும். இந்த பேக்கை 20 நிமிடங்கள் முகத்தில் வைத்திருக்கவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த பேக்கை பயன்படுத்தலாம்.
இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு, 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேக் தயாரிக்கவும். இந்த பேக்கை முகம் மற்றும் கழுத்தில் தடவவும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய இந்த பேக் சிறந்தது.
2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறுடன், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லைக் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். நன்கு உலர்ந்த பிறகு கழுவி விடவும்.
சருமம் பொலிவு பெற, தக்காளி கூழுடன் சர்க்கரையைக் கலந்து சருமத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். இந்த பேக் முகத்தை அழகாக்க உதவும்.
இரண்டு ஸ்பூன் தக்காளி சாறுடன் சிறிது ரோஸ் வாட்டரைக் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். நன்கு உலர்ந்த பிறகு கழுவி விடவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தலாம்.
![]()