உலகம்
எப்ஸ்டீன் ஆவண விவகாரம் ; ஸ்கொட்லாந்து தொழிற் கட்சி தலைவர் பகிரங்க அழைப்பு

பிரித்தானியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவிகளிலிருந்து விலக வேண்டும் என்று ஸ்கொட்லாந்து தொழிற் கட்சியின் தலைவர் அனஸ் சர்வார் (Anas Sarwar) பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
இது அந்நாட்டின் ஆளும் கட்சிக்குள் பெரும் பிளவை வெளிப்படுத்தியுள்ளது.
டவுனிங் ஸ்ட்ரீட் (பிரதமர் அலுவலகம்) தலைமையில் மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள அனஸ் சர்வார், ஸ்கொட்லாந்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்த முடிவை எடுப்பது எனக்கு எளிதானதல்ல, இது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
இருப்பினும், எனது வாக்காளர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமையே முதன்மையானது,” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
![]()