முச்சந்தி

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை!

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுக்க இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் யாழில் பல்வேறு தடவைகள் கடும் மழை பெய்தமையால், புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் புதைகுழிக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்றைய தினம் நல்லூர் பிரதேச சபை, யாழ்ப்பாணம் மாநகர சபை ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

மழை நீரை வெளியேற்றிய பின்னர் புதைகுழி சேற்று தன்மையாக காணப்படுவதால், அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டு, அன்றைய தினத்திற்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.

இதேவேளை புதைகுழிக்குள் இருந்து வெள்ளம் வெளியேற்றும் நடவடிக்கைகளை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதனிடையே, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான மதிப்பிடப்பட்ட பாதீட்டையும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *