உலகம்

சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரான் போர் விமானம் ; ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

நாங்கள் அவர்களுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என அரபிக் கடலில் ஈரானின் ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிறகு ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.

ஈரானின் தெற்கு கடற்ரையில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய அந்நாட்டு ட்ரோனை அமெரிக்க கடற்படை போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.
இந்த சூழலில் ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதாவது: அமெரிக்கா, ஈரானுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்து அவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

சிறிது காலத்திற்கு முன்பு அவர்களுக்கு ஒப்பந்தம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்பொழுது அது நடக்கவில்லை. அதனால் நாங்கள் ‘மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கி தாக்குதல் நடத்தினோம்.

அவர்கள் தற்போது மீண்டும் ‘மிட்நைட் ஹேமர்’ போன்ற ஒரு தாக்குதலை விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன். பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *