இலங்கை

இதற்கு முன்பு சொல்லப்படாத ஒன்றை சொல்லிய ஜனாதிபதி – ஹர்ஷ டி சில்வா

நாடு காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு பொருளாதார சுதந்திரத்தை அடைவது அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திர கொண்டாட்டத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் நேரடி காணொளியை வெளியிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், நாடு இன்னும் பொருளாதார சுதந்திரத்தை அடையவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், உண்மையான சுதந்திரம் என்பது மக்கள் தங்கள் உழைப்பையும் செல்வத்தையும் தங்கள் விருப்பப்படி பயன்படுத்திக்கொள்ளும் திறன் என்று சுட்டிக்காட்டியிருந்தார்

முழு உலகத்துடன் தொடர்புகொள்ளும் வகையில், தொடர்பு பாலங்களை அமைப்பதும், நாட்டு மக்களின் திறன்களின் அடிப்படையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும், அதன் பலன்கள் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் ஒரு அமைப்பை உருவாக்குவதும் தனது தொலைநோக்குப் பார்வை என்று அவர் கூறியிருந்தார்.

இருப்பினும், இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ஆற்றிய உரையை சிறப்பு கவனம் செலுத்திய ஹர்ஷ டி சில்வா, இதற்கு முன்பு சொல்லப்படாத ஒன்றை ஜனாதிபதி குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டினார்.

“75 ஆண்டுகளாக நாட்டில் நல்லதும் கெட்டதும் நடந்தேறி வருகிறது” என்று கூறி, 75 ஆண்டுகால சாபம் என்ற கருத்தை ஜனாதிபதி இன்று தனது உரையில் நிராகரித்ததாக ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

“எல்லாமே கெட்டவை அல்ல என்றும் நாங்கள் சொல்லி வருகிறோம். வரலாற்றில் நடந்த நல்ல விஷயங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும், ” என்று அவர் குறிப்பிட்டார்.

78 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் அடையப்பட்ட வலுவான மற்றும் நியாயமான சாதனைகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறிய ஹர்ஷ டி சில்வா, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து ஒரு வலுவான நாடாக முன்னேற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *