பலதும் பத்தும்

திடீரென உயிர்பெற்ற ஈரான் எரிமலை; 7 லட்சம் ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த அதிசயம்!

ஈரானில் சுமார் 7 இலட்சம் ஆண்டுகளாக எவ்வித அசைவுமின்றி, ‘அழிந்துவிட்டது’ எனக் கருதப்பட்டு வந்த 13,000 அடி உயரமுடை தப்தான் எரிமலை, தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக செயற்கைக்கோள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மற்றும் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ‘சென்டினல்-1’ செயற்கைக்கோள் எடுத்த படங்களை ஆய்வு செய்த போது, கடந்த 2023 ஜூலை முதல் 2024 மே வரையிலான 10 மாதங்களில் எரிமலையின் உச்சிப்பகுதி 9 சென்டிமீட்டர் உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த எரிமலையின் உட்பகுதியில் ஆழமான இடத்தில் அதிகப்படியான வெப்பம் கொண்ட திரவங்கள் (Magma) மற்றும் வாயுக்கள் குவிந்து வருவதாலேயே, எரிமலையின் தரைப்பகுதி மேல்நோக்கி உயர்ந்துள்ளது என விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.

இது அந்த எரிமலை மீண்டும் செயல்பாட்டுக்குத் தயாராவதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

கடந்த 7 இலட்சம் ஆண்டுகளாக எந்தவித எரிமலைக் குழம்பு கசிவோ அல்லது அசைவோ இல்லாததால், இது இதுவரை ‘அழிந்த எரிமலை’ என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், தற்போதைய மாற்றங்களை அடுத்து, இது ‘உறங்கும் எரிமலை’என விஞ்ஞானிகளால் அதிகாரபூர்வமாக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திடீர் மாற்றம் அப்பகுதி நிலப்பரப்பில் புவியியல் ரீதியாக பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், விஞ்ஞானிகள் இந்த எரிமலையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்காசிய நாடான ஈரான்–பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள 13,000 அடி உயரமுள்ள தப்தான் எரிமலை, கடந்த 7 லட்சம் ஆண்டுகளாக அமைதியாக இருந்ததால் ‘அழிந்த எரிமலை’ என வகைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சென்டினல்-1 செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த போது, 2023 ஜூலை முதல் 2024 மே மாதங்கள் வரை உச்சிப்பகுதி 9 சென்டிமீட்டர் உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது, எரிமலையின் உட்பகுதியில் திரவம் (magma) மற்றும் வாயுக்களின் அதிகப்படியான செயல் காரணமாக ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.

தற்போதைய மாற்றங்களை பின்பு, இந்த எரிமலை “உறங்கும் எரிமலை” என மறுவகைப்படுத்தப்பட்டு, புவியியல் ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், விஞ்ஞானிகள் இதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button