இலங்கை
அச்சுறுத்தல், கைதுகள் செய்தாலும் உரிமைக்கான போராட்டம் தொடரும் – வேலன்சுவாமிகள்!

எவ்வளவு தடைகள் வந்தாலும் அச்சுறுத்தல் வந்தாலும் கைதுகள் செய்தாலும் எங்களது உரிமைக்கான போராட்ம் தொடரும் என்று வேலன்சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக இன்றையதினம் மக்கள் எழுச்சிப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார்.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக அண்மைக்காலமாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது. மக்களின் காணிகளை விடுவிக்குமாறும் விகாரையை அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்றும் மக்கள் எழுச்சிப் போராட்டம் இடம்பெற்றது.
![]()