முச்சந்தி

தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராட்டம்

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையை உடனடியாக அகற்றுமாறு கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரியும், கடந்த டிசம்பர் மாதம்-21 ஆம் திகதி நடந்த போராட்டத்தின் போது சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவர் பொலிஸாரால் காட்டுமிராண்டித்தனமாகக் கைது செய்யப்பட்டமைக்கு எதிராகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள போராட்டம் வெள்ளிக்கிழமை (02) மாலை 4.15 மணியளவில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் ஆரம்பமாகியது.

இந்தப் போராட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்ரர், மூத்த எழுத்தாளர் மு.ஈழத்தமிழ்மணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேற்படி போராட்டத்தின் தொடர்ச்சியாக மாபெரும் தொடர் போராட்டம் சனிக்கிழமையும் (03) காலை 7 மணி முதல் மாலை-06 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *