முச்சந்தி

கதிர்காமக் கந்தன் பேரிடருக்கு உதவி; நகைகள் உள்ளிட்ட தங்கம் ஏலத்தில்

கதிர்காமம் ஆலயத்திற்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகள் உள்ளிட்ட தங்கப் பொருட்களில் ஒரு பகுதியை ஏலத்தில் விற்று, அதன்மூலம் கிடைக்கும் நிதியை ‘ரிபில்டிங் ஶ்ரீலங்கா’நிதியத்திற்கு வழங்குவதற்கு ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமேவால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஆலயத்தில் உள்ள தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களில் தெய்வ படங்கள் அடங்கிய பொருட்கள் மற்றும் பழமைவாய்ந்த தங்க பொருட்கள் தவிர்ந்த ஏனைய தங்க நகைகளில் 70 வீதமானவற்றை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவற்றை விற்பனை செய்யும் பணியை தேசிய இரத்தின கற்கள் மற்றும் தங்க ஆபாரணங்கள் அதிகார சபையின் கண்காணிப்பில் நடத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கு தேவையான ஆலோசனைகள் பௌத்த மத விவகார ஆணையாளரிடம் ஆலய நிர்வாகத்தினால் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இரண்டாயிரம் வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட தங்க பொருட்களும் இதன்போது விற்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிலர் சர்ச்சைகளை எழுப்பியுள்ளனர். ஆனால் அவ்வாறு பழைய வரலாறுகளை கொண்ட எந்தவொரு பெறுமதியான பொருட்களும் விற்கப்படவில்லை என்றும். அண்மை காலத்தில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க நகைகளை மாத்திரமே விற்பனை செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமேவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *