உலகம்

உக்ரைன் போரில் ரஷ்யாவின் வெற்றி உறுதி-புடின்; சரணடையத் தயாராக இல்லை – ஸெலென்ஸ்கி

உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி புடினின் உரையை விமர்சித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி, எந்த விலை கொடுத்தும் அவர்கள் அமைதியை ஏற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரஷ்ய மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதன்கிழமை இரவு உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:“நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உக்ரைன் போரில், ரஷ்யா தனது இலக்கை எட்டி வெற்றி பெறும். நமது நாயகர்கள் (ராணுவ வீரர்கள்) மீதும், நமது வெற்றியின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.கோடிக்கணக்கான ரஷ்ய மக்கள் புத்தாண்டு தருணத்தில் ரஷ்ய வீரர்களுக்காக பிரார்த்திக்கின்றனர். நாட்டு மக்கள் ராணுவத்தின் பின்னால் ஒற்றுமையாக நிற்கின்றனர் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி பதிலளித்து ஆற்றிய புத்தாண்டு உரையின்போது, ரஷ்ய ஜனாதிபதியின் பேச்சை விமர்சிக்கும் வகையில், அவர்கள் அமைதியை ஏற்கப் போவதில்லை எனத் தெரிவித்தார்.மேலும், அவர் பேசியதாவது:“உக்ரைன் அமைதியை விரும்புகிறது. ஆனால், ஒரு பலவீனமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை. போருக்கான முடிவையே விரும்புகிறோம், உக்ரைனுக்கான முடிவை அல்ல.நாங்கள் சோர்வடைந்துவிட்டோம், சரணடையத் தயாராக இருக்கிறோம் என நினைப்பவர்கள் பெரும் தவறிழைக்கிறார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *