நுகேகொடையில் குடியேறிய மஹிந்த ராஜபக்ச – பின்னணி என்ன?

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச, தற்காலிகமாகக் கொழும்பு, நுகேகொடை பகுதியில் உள்ள இல்லம் ஒன்றில் குடியேறியுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே அவர் நுகேகொடையில் உள்ள இல்லத்திற்கு வந்துள்ளார்.
அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், தேவைப்படின் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்குமான இலகுத்தன்மை கருதியே அவர் கொழும்புக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்கள் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு 07, விஜேராம அரச இல்லத்திலிருந்து கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி அவர் வெளியேறினார்.
அரச இல்லத்திலிருந்து வெளியேறிய பின்னர், சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர் தங்கல்லையில் உள்ள ‘கார்ல்டன்’ இல்லத்தில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()