பலதும் பத்தும்

ஏர் அஸ்தானா விமானம் கஸகஸ்தானில் இருந்து இலங்கைக்கு

ஐரோப்பாவில் ஆரம்பமாகியுள்ள குளிர்காலத்தை முன்னிட்டு, கஸகஸ்தானில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த முதல் விமானம் இன்று (25) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்தது.

கஸகஸ்தானின் அல்மாட்டி (Almaty) சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் அஸ்தானா (Air Astana) நிறுவனத்திற்குச் சொந்தமான KC-167 ரக விமானம் மூலம், இன்று மாலை 4.10 மணியளவில் இந்த சுற்றுலாப் பயணிகள் குழுவினர் நாட்டை வந்தடைந்தனர்.

இந்த விமானத்தில் 182 பயணிகளும் 08 பணிக்குழாமினரும் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமான சேவையானது வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை என இரண்டு நாட்கள், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை கஸகஸ்தானின் அல்மாட்டியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button