உலகம்

பங்களாதேசத்தில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்: பத்திரிகை ஆசிரியர்கள்

ஊடகவியலாளர்கள் உயிர்வாழ்வதற்கான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாக பங்களாதேசத்தின் முன்னணி பத்திரிகை ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான பங்களாதேச இளைஞர் போராட்டத்தின் முன்னணி தலைவரான ஷெரிப் ஒஸ்மான் ஹாதி பெப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கியபோது முகமூடி அணிந்த நபர்களால் டாக்காவில் வைத்து தலையில் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பரவலான போராட்டங்கள் இடம்பெற்றன. வன்முறைக் கும்பல்கள் முக்கிய ஊடக நிறுவனங்கள் மற்றும் கலாச்சார நிலையங்களுக்கு தீ வைத்தன. த டெய்லி ஸ்டார் மற்றும் புரோதோம் அலோ அலுவலகங்களும் தாக்கப்பட்டவற்றில் அடங்கும். இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் பிரதமர் ஹசீனாவின் நலன்களுக்கு சேவை செய்வதாக குற்றம் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை பத்திரிகைளின் ஆசிரியர்கள் கடுமையாக மறுத்துள்ளனர்.

பங்களாதேசத்தின் பத்திரிகையாளர்கள் சங்கம், பத்திரிகை உரிமையாளர்கள் சங்கம் ஆகியன ஏற்பாடு செய்த எதிர்ப்புக் கூட்டத்தில், த டெய்லி ஸ்டார் பத்திரிகையின் ஆசிரியர் மஹ்ஃபுஸ் அனாம், பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படையான கொலை மிரட்டல்கள் வருவதாகக் கூறினார். இவ்வாறான சூழலில் முன்னணி பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் உயிர்வாழ்வதற்கான போராட்டமாக வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *