பலதும் பத்தும்

மர்ம வடிவங்களில் செவ்வாய் கிரகம் கியூரியாசிட்டி ரோவர் கண்டுபிடிப்பு

செவ்வாய்கிரகத்தில் சுற்றிவரும் கியூரியாசிட்டி ரோவர் இப்போது புதிய  கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

செவ்வாய்க்கிரகத்தில் உள்ள ரோவர் பார்ப்பதற்கே விசித்திரமான பல பாறைகளை கண்டுபிடித்துள்ளது.

பாறைகள் என்றால் கரடுமுரடாக இருக்கும் ஆனால் ரோவர் இப்போது ஆய்வு செய்யும் பாறைகள் பலகோண வடிவங்களில் உள்ளதாக இருக்கின்றன.

அதாவது தரையில் மாபிள்கள் பதித்தது போலவும் அல்லது காய்ந்து போன இடத்தில் வெடிப்புகள் வருவதைப்போலவும் பாறைகள் காணப்படுகின்றன.

இதற்காக ரோவர் தனது அதிநவீன கருவிகளான சம்கம் லேசர் கருவிகளை பயன்படுத்தி அங்குள்ள பாறை இடுக்குகள் என்ன வடிவில் உள்ளது என ஆய்வு செய்துவருகின்றது.

நாசா விஞ்ஞானிகள் இந்த வடிவங்களை கண்டு ஏன் ஆச்சரியப்படுகின்றார்கள் தெரியுமா?

பூமியில் இது போன்ற வடிவங்கள் எரிமலைப்பகுதியிலோ அல்லது நீர் வற்றிய இடங்களிலோ உருவாகும் அதே போல செவ்வாய் கிரகத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நீர் இருந்ததா அல்லது நில நடுக்கத்தால் இந்த வெடிப்பு உருவானதா என்ற பூமியின் வரலாற்றை கண்டு பிடிக்க இது உதவும்.

குறிப்பாக இந்த பாறைகளுக்கு உள்ளே இருக்கும் பொருட்கள் மேலே இருக்கும் பாறையில் இருந்து வேறுபட்டு இருப்பதை ரோவர் கண்டுபிடித்து இருக்கின்றது.

இந்த நிலையில் செவ்வாய்கிரகம் ஒரு செம்மண் காடு மட்டும் இல்லை என்றும் அது பல புவியியல் இரகசியங்களை மறைத்து வைத்துள்ள உலகம் என்றும் ஆராட்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *