பலதும் பத்தும்

விண்ணில் பாயுவுள்ள அமெரிக்காவின் செயற்கைக்கோள் இதனால் என்ன நன்மை தெரியுமா?

அமெரிக்கா உருவாக்கிய புளூ பேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.

இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன்,அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும்.

இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமைய ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 8:54 மணிக்கு LVM 3 ராக்கெட் வாயிலாக புளூ பேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இம்மாதம் 15 மற்றும் 21ம் திகதிகளில் புளூபேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *