பலதும் பத்தும்

இந்திய விமானப்படையின் 2 ஹெலிகொப்டர்கள் இலங்கை வந்தடைவு

இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு MI-17V5 ரக உலங்கு வானூர்திகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இந்த உலங்கு வானூர்திகளுடன் 22 பேர் கொண்ட விமானப்படை குழுவினர் மற்றும் மனிதாபிமான உதவிப் பொருட்களும்  (29) மாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக இந்த உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படவுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button