பலதும் பத்தும்

தங்கத்தை விட விலை உயர்ந்த காபி எங்குள்ளது தெரியுமா?

ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த அனுபவங்களுக்குப் பெயர் பெற்ற டுபாய் நகரில், கஃபே ஒன்றில் உலகின் மிகவும் விலையுயர்ந்த coffee ஒரு கோப்பை $980 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ரூபாய் படி ஒரு கோப்பை coffee யின் விலை 298,508 ரூபாவாகும். டுபாய் நகரில் உள்ள ஜூலித் (Julith) கஃபேவில் இந்த coffee விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பனாமாவைச் சேர்ந்த அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட “Nido 7 Geisha” வகை கோப்பி கொட்டைகளிலிருந்து இந்த coffee தயாரிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

கடந்த மாதம், டுபாய் கஃபேயான ‘ரோஸ்டர்ஸ்’ (Roasters), ஒரு கோப்பை coffee 2,500 திர்ஹம்ஸுக்கு விற்று கின்னஸ் உலக சாதனை படைத்தது.

தற்போது ஜூலித் கஃபே அதை முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இந்தக் coffeeயை தயாரித்து வழங்கும் ஜூலித் கஃபேயின் இணை நிறுவனர் செர்கான் சக்ஸோஸ், இது தேநீரைப் போன்ற மலர் மற்றும் பழங்களின் நறுமணம் கொண்டிருப்பதாகவும், இதில் மல்லிகை போன்ற வெள்ளை மலர்களின் வாசனை, ஆரஞ்சு மற்றும் பெர்கமோட் போன்றவைகளின் சுவைகள் மற்றும் ஒரு துளி ஆப்ரிகாட் மற்றும் பீச் சுவையும் இருக்கும்,” என்றும், “இது தேன் போல, மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜூலித் கஃபே, பனாமாவில் நடைபெற்ற ஏலத்தில் இந்த கோப்பி கொட்டைகளை வாங்க கடுமையாகப் போராடியதாகவும் அவர் தெரிவித்தார்.

சுமார் 20 கிலோகிராம் கோப்பி கொட்டைகள் 2.2 மில்லியன் திர்ஹம்ஸுக்கு (சுமார் $600,000 அமெரிக்க டொலர்) வாங்கப்பட்டதாக ஜூலித் கஃபே தெரிவித்துள்ளது.

காபி கொட்டைகளுக்கு இதுவரை கொடுக்கப்பட்டதிலேயே இதுதான் அதிகபட்ச விலை என்றும் அதன் இணை நிறுவனர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button